(சுமன்)
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் 07வது ஆண்டு நினைவு நாளை அனுஸ்டிக்கும் முகமாக நாட்டின் பல்வேறு பகுதிகளின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் (21) கல்லடி இளைஞர்களின் ஏற்பாட்டில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நினைவு அஞ்சலி நிகழ்வு கல்லடி அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லடி டச்பார் புனித இன்னாசியார் ஆலய பங்குத் தந்தை யூட் டிலக்ஸன் அடிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் இருதயம் செல்வகுமார் மற்றும் பிரதேச இளைஞர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக நினைவுச் சுடரேற்றப்பட்டு, படுகொலைக்குள்ளான ஆத்மாக்களின் சாந்தி வேண்டி ஜெப வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


