மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி,
WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 86.37 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 94.75 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, அதன் விலை 2.663 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்திய சூழல்கள் எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய இந்த விலை வீழ்ச்சி சர்வதேச சந்தை ஆய்வாளர்களிடையே முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.


