நாட்டின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் இன்று 75 மில்லி மீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில், இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.