மட்டகளப்பில் தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் உள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் மற்றும் லேபில் இடல் தொடர்பான பயிற்சி நெறியானது ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பிரதிபணிப்பாளர் பி.எம்.எம். சமீம் தலைமையில் ஏற்றுமதி அபிவிருத்திசபை பதில் பணிப்பாளர் டி.எம்.பி. திசாநாயக்க பங்குபற்றுதலுடன் சர்வோதயா மண்டபத்தில் இன்று (08) இடம் பெற்றது.

மாவட்டத்தின் ஏற்றுமதி துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர் ஏ.பிரபு ஏற்பாட்டில் கொழும்பு மிற்சிற்டி ரொட்டரி கழகத்தின் அனுசரணையில் இவ் பயிற்சி நெறி இடம் பெற்றன.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளும் போது தனித்துவமான பொதியிடல் முறைமையினை பயன்படுத்தும் போது சிறந்த சந்தை வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடிகின்றது.

இந் நிகழ்வின் வளவாளர்களாக Srilanka Institute of Pakeging நிறுவகத்தின் தலைவர் நிசாந்த பெரேரா, உப தலைவர் உபுல் அபேவிக்ரம மேற்கொண்டனர்.

ஏற்றுமதி தொழில்துறையின் முக்கிய பங்கான பொதியிடல் மூலம் விற்பனை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கு தேவையான ஆலோசனைகள் இதன் போது வழங்கப்பட்டன.

பொருட்களின் சேதங்களை தவிர்ப்பதற்கான பொதியிடலின் நுட்பங்கள் தொடர்பான ஆலேசனைகள் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் ஏற்றுமதி அபிவிருத்திசபையின் உத்தியோகத்தர்கள், தேசிய அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், சிறு தொழில் முயற்சி அபிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள், கைத்தொழில் அபிவிருத்திசபை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.