கோட்டைக்கல்லாறு மாணவர்களுக்கான கௌரவம் மற்றும் பரிசளிப்பு விழா 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கௌரவம் மற்றும் பரிசளிப்பு விழா 2025 நிகழ்வானது
ஏஜே என்டர்பிரைசஸ் ஃபார்ம் பிரைவேட் லிமிடெட் நிறுவன தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான அருள்ராஜா ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் (05) இடம்பெற்றது.

கோட்டைக்கல்லாறு கிராமத்தின் மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் இப்பிரதேச மாணவர்கள் மற்றும்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்கள்,
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஐந்து A சித்திகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள்,
க.பொ.த உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட மாணவர்கள்,
இணைப்பாடவிதான போட்டிகளில் மாகாண மட்டம், தேசிய மட்டங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்க பரிசில் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் அதிதிகளாக கோட்டைக் கல்லாறு மகாவித்தியாலய அதிபர், கல்முந்தல் திருவள்ளுவர் பாடசாலையின் அதிபர், கோட்டைக் கல்லாறு கண்ணகி வித்தியாலய அதிபர், ஆலயங்களின் வண்ணக்கர்கள், ஒய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திசங்கத்தினர், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஏஜே பார்ம் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது
பாடசாலையின் உட்கட்டுமானம், மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.