எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தை (ESSCA) கண்காணிக்கும் விஜயம் ஒன்றில் ஈடுபட்டார்.
இதன் போது, நோயாளர்களுக்கான சேவைகளை நேரில் பார்வையிட்டு, எதிர்கால சமூக நலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத் தலைவருமான தோழர் கந்தசாமி பிரபு, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன், வைத்திய நிபுணர்கள் மற்றும் நிலைய நிருவாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


