மாகாணசபை தேர்தல்.
“2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட நன்மைகள் அனைத்தையும் இல்லாமல் செய்யும், பழைய முறையிலான மாகாணசபை தேர்தல் முறையை கொண்டுவர அரசாங்கம் முற்படாமல் புதிய தேர்தல் முறைப்படி மாகாண சபை தேர்தலை நடத்த அரசு முன்வரவேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி அரசை கோரியுள்ளது.
இலங்கையில் 2017ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டம்” (Provincial Councils Elections [Amendment] Act, No. 17 of 2017) என்பது நாட்டின் ஜனநாயகத் துறையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்பட்ட ஒருவிடயமாகும்.
இந்தச் சட்டம் மக்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதோடு, பெண்களுக்கு அரசியலில் இடம் வழங்குவதற்கான சட்ட அடித்தளத்தையும் ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இந்தச் சட்டத்தின் மூலம் ஒவ்வொரு கட்சியும் அல்லது சுயேச்சைக் குழுவும் தங்களின் வேட்பாளர் பட்டியலில் குறைந்தது 25% பெண் வேட்பாளர்களை சேர்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது. இது, அரசியலில் பெண்களின் பங்கேற்பை சட்டரீதியாக உறுதிப்படுத்திய முதல் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். ( No. 17 of 2017 Section 6Aஇன் ஊடாக அது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது எனலாம்.
அதாவது,
அடுத்ததாக அதன் மூலம் கிடைத்த நன்மை 50% தொகுதி முறை மற்றும் 50% விகிதாசார முறையாகும். அதாவது,
50% தொகுதிகளின் மூலம் (Ward system போன்று)
மக்களுக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி கிடைக்கும் என்ற ஏற்பாடாகும்.
அதேபோன்று, 50% விகிதாசார முறையின் மூலம்
ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என்ற முறையாகும்.
இதன் மூலம் இத்தேர்தல் முறை நியாயமானதும் மக்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் மாறியது என்று கூறலாம்.
இதன் மூலம் மக்களுக்கு தங்கள் பகுதியில் நேரடியாகப் பொறுப்பு ஏற்கும் உறுப்பினரை தெரிவு செய்யலாம் என்ற நன்மை கிடைத்திருந்தது.
அதேபோன்று பெண்களின் அரசியல் பங்கேற்பும், சட்டத்தால் உறுதிசெய்யப்பட்டது.
இவை அனைத்தும் மக்களுக்கு ஜனநாயக நன்மைகளை கூடுதலாக வழங்கின என்பதில் ஐயமில்லை.
இந்தச் சட்டம் 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட போது, மூவின சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 157 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
அதாவது இது ஒரு பொதுமக்கள் ஒற்றுமையால் ஆதரிக்கப்பட்ட சட்டம் என்றும் கூறலாம். இப்படியான நன்மைகள் நிறைந்த சட்டத்தை இல்லாமல் செய்துவிட்டு, பழைய முறைமைக்கு செல்ல முற்படுவது நல்லதல்ல.
ஆகவே அரசாங்கம் உடனடியாக எல்லை நிர்ணய கமிட்டியினை மீள அமைத்து புதிய அறிக்கையை பெற்று 2017ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் திருத்த சட்டப்படி மாகாண சபை தேர்தலை நடத்த முன் வரவேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது.


