மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் UNICEF பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்_

கிழக்கு மாகாணத்திற்கு யுனிசெஃப் அமைப்பின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்த அமைப்பின் தலையீடு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து முன்னுரிமையுடன் கலந்துரையாடல் ஒன்று (21) செவ்வாய்க் கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் இலங்கையில் உள்ள யுனிசெஃப் அமைப்பின் பிரதிநிதி எம்மா பிரிக்ஹம் தலைமையளித்தனர்.

இதன்போது முக்கியமாகக் கல்வி மற்றும் சுகாதார துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக இலங்கை அரசாங்கம் எடுத்த முக்கியமான முடிவுகளைப் பற்றி யுனிசெஃப் பிரதிநிதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சேவை துறைகளின் மாகாண பணிப்பாளர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.