கிண்ணியா தோனா கடற்கரை சிறுவர் பூங்கா தடுப்புச் சுவருக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

கிண்ணியா தோனா சிறுவர் பூங்காவிற்கான கடல் அரிப்பு சுவர் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (18) இடம் பெற்றது.
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார். நீண்ட காலமாக கடலரிப்புக்குள்ளாகியுள்ள குறித்த கரையோர பகுதியை சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்படவுள்ளது.
இதனை கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஊடான மேற்பார்வையில் நடை முறைப்படுத்தப்படவுள்ளது.
இதில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி உட்பட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.