வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

ருத்திரன்.
கிழக்கில் வராலற்று சிறப்புமிக்க திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று (12.09.2025) வெகு சிறப்பாக நடைபெற்றது.
வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்த்தான தீர்த்தோற்சவம் வெருகல் மகாவலி கங்கையில் இடம்பெற்றது.
கஜாவல்லி மகாவல்லி சமேதம் சித்திரவேலாயுதர் எழுந்தருளி பக்த அடியார்களின் அரோகரா கோஷத்துடன் தீர்த்தக் கரைக்கு சென்று விசேட பூசைகள் இடம்பெற்று தீர்த்தம் இடம்பெற்றது.
வருடாந்த மகோற்சவம் கடந்த 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 நாட்கள் திருவிழாக்கல் இடம்பெற்று இன்று இடம்பெற்ற தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் இனிது முடிவடைந்தது.இந்த தீர்த்தோற்சவத்தில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் ஆயிரக்கனக்கான சைவ மத பக்த அடியார்கள் பங்கேற்றனர்.உற்சவ கலா திருவிழாக்கள் யாவும் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க.வைத்திஸ்வர குருக்கல் தலைமையில் மரபு வழி கங்கானமும் நிருவாகமும் நடாத்தியிருந்தனர்.