ரிதத்தின் 20வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ரிதம் இளைஞர் கழகம் மற்றும் ரிதம் சனசமூக நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஆயித்தியமலை தூய சதா சகாயமாதா ஆலய வருடாந்த திருவிழா பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களுக்கான குடிநீர் போத்தல்கள் வழங்கி வைக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ரிதம் இளைஞர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தி.சில்வயன் மற்றும் தலைவர் செல்வி டினுசிக்கா செயலாளர் திருமதி லோ.ரக்சனா ஆகியோரின் தலைமையில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும், ரிதம் இளைஞர் கழக ஆலோசகருமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன், மாநகரசபை உறுப்பினர் சீ.ஜெயச்சந்திரன், முன்னாள் மாநகரசபை உறுப்பினரும், ரிதம் சனசமூக நிலையத்தின் தலைவருமான அ.கிருரஜன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் த.ராஜேந்திரன், மட்டக்களப்பு பல்நோக்கு கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள், கழக முன்னாள் தலைவர்கள், கழக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு யாத்திரிகர்களின் தாகம் தீர்க்கும் முகமாக தண்ணீர் போத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


