பாறுக் ஷிஹான்
நிந்தவூர் பிரதேச சபையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (29) சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் ஜே.பி தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்
“எமது இன்றைய புதிய சபைக்கான காலம் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இன்று வரையான குறுகிய காலப்பகுதியினுள் சபையின் தவிசாளர் மற்றும் சபையின் உறுப்பினர்களினால் ,பொதுமக்களுக்குத் தேவையான பல பிரச்சினைகள் இனங்கானப்பட்டு அதற்கான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளது .
படிப்படியாக இன்னும் பல பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தாம் முகம் கொடுத்து, எதிர்காலத்தில் சபைக்கான வருமானத்தை அதிகரிப்பதோடு, பொதுமக்களுத் தேவையான சேவைகளை மேலும் அதிகரிப்பதற்குரிய பாரிய முயற்சிகளினை எமது சபை மேற்கொண்டு வருகின்றது.
இன்று காணப்படுகின்ற இச்சபையின் மீது #பொதுமக்கள் என்றும் இல்லாதவாறு அதிக #நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இன்னும் சிறப்பான முறையில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை இனங்கண்டு , எவ்வாறு முன்னோக்கி நகர வேண்டும் என்பது பற்றியும் இதன் போது தவிசாளர் தெளிவூட்டினார்.
இக்கலந்துரையாடலில் எமது பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் #எம்_ஐ_இர்பான் மற்றும் சபையின் #உறுப்பினர்களான எம் ஏ எம் றசீன், எம் எல் சம்சுன் அலி, ஏ இப்திகார் அஹமட், எம் ஐ எம் ஜாபிர், எஸ் எல் சாபி சுலைமான், ஜுசைல் ஜெசூலி, எச் அம்ஜத் அலி, றிஹானா பாயீஸ், உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் நிந்தவூர் பிரதேசத்தின் அனைத்துத் துறைசார் புத்திஜீவிகள், கல்விமான்களும் இதன் போது வரவழைக்கப்பட்டு, ஊரின் தற்காலப் பிரச்சினைகளை எவ்வாறு பிரதேச சபையோடு இணைந்து தீர்க்க முடியும் என்பது சம்பந்தமாகவும் முதற்கட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களின்
ஆலோசனைகளும் பெறப்பட்டது.


