ஊடகவியலாளருக்கு கௌரவ சின்னம் வழங்கி வைப்பு!!

ஊடகத்துறையில் 18 வருடங்களாக இன, மத பேதங்களுக்கு அப்பால் சிறப்பாகச் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர் எம்.என்.எம்.புஹாரி அவர்களின் ஊடக சேவையை பாராட்டி கௌரவித்துள்ளனர்.

திருகோணமலை தோப்பூர் -பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இன்று சனிக்கிழமை (19) காலை இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வின்போது குறித்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கௌரவிப்பு சின்னத்தினை தோப்பூர் வர்த்தக சங்கம் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது