எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவின் மத்தியஸ்த சபைக்காக புதிதாக தெரிவுசெய்யப்பட்ட 21உறுப்பினர்களுள் தவிசாளர் , பிரதி தவிசாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் (25) செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரதேச செயலாளர் எம். ஏ. சி. றமீஸா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் கு.பிரணவன், கெளரவ அதிதிகள் மற்றும் ஏனைய அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் ஜுமானா ஹஸீன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச். எம். எம்.றுவைத், மாவட்ட நீதிமன்ற பதிவாளர் திருமதி.செந்தூரன் சசிகலா, கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். எம்.தாஹிர்,
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மத்தியஸ்த சபை பயிற்றுவிப்பாளர் எம். ஐ.எம். ஆசாத், மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். ஆசாத், தியாவட்டவான் அரபா வித்தியாலய அதிபர் எம். இஸ்மாயில், கேணி நகர் அல் மதீனா வித்தியாலய அதிபர் எம்.மீராமுகைதீன், மாவடிச்சேன அல் இக்பால் வித்தியாலய அதிபர் எம்.ஐயூப்கான், மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகள், புதிய மத்தியஸ்த சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
புதிய தவிசாளராக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச். எம். அரபாத், பிரதி தவிசாளராக கோ.ப.மத்தி பிரதேச செயலக உத்தியோகத்தர் எம்.சி.எம்.மன்சூர்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
10


