(வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு கிரான்குளம் ஸ்ரீ சத்ய சாயி சஞ்சீவனி வைத்தியசாலையில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 101ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நாளை (27) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் ஒத்துழைப்புடன் இம்மாபெரும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரத்ததானம் மூலம் உயிரைக் காக்கும் உன்னத சேவையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குமாறு வைத்தியசாலை பொது முகாமையாளர் டேவிட் சில்வெஸ்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இரத்த தானம் – ஒரு உயிரைக் காக்கும் மகத்தான தானம்” என்ற உயரிய நோக்குடன் நடைபெறும் இம்முகாமில் வழங்கப்படும் இரத்தம், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களின் உயிரைக் காப்பதற்கு பெரிதும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


