2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்கள் வீதியில் இறங்குகின்றனர்!

2027 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, ரூ. 25,000/- இடைக்காலக் கொடுப்பனவை வென்றெடுப்பதற்காக பாரிய கூட்டுத் தொழிற்சங்கப் போராட்டமொன்றை ஆரம்பிக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

2026.11.15 அன்று நடைபெற்ற தொழிற்சங்கங்களின் கூட்டுக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, அடுத்தகட்ட நடவடிக்கைகள் வருமாறு:

நவம்பர் 23: தேசிய மட்டத்தில் அனைத்து அரச அலுவலகங்களுக்கும் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டப் போராட்டம்

நவம்பர் 30: நாடளாவிய ரீதியில் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம்

இந்தக் கூட்டுப் போராட்டத்தில் இணைந்துள்ள தொழிற்சங்கங்கள்:

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க சம்மேளனம்

தொழில்நுட்ப சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க சம்மேளனம்

ஆசிரியர், சுகாதார சேவை மற்றும் கனிஷ்ட ஊழியர் தொழிற்சங்கங்கள்

உரிமைகளுக்காக முன்வருவோம்! அனைத்து அரச ஊழியர் சகோதர சகோதரிகளும் இதற்காக ஒன்றிணைந்து அணிதிரள்வோம்!

— முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு —