கல்முனை ஆதார வைத்தியசாலையில் உடற்பயிற்சி மையம் திறந்துவைப்பு

( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி மையம் (Gym Centre) அண்மையில் பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் இப் புதிய ஜிம் நிலையத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.

அந்த நிலையம் கடந்த ( 9) திங்கள் முதல் செயற்பட ஆரம்பித்துள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் மருத்துவர் பி.சிறிசங்கர் அறிவித்துள்ளார்.

வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நேர அட்டவணயின்படி ஆண் ஊழியர்களுக்கு
திங்கள், புதன், வெள்ளி: காலை 5.00 மணி – 8.00 மணி
மற்றும் திங்கள், புதன், வெள்ளி: மாலை 4.00 மணி – 8.00 மணி
மற்றும் ஞாயிறு: மாலை 4.00 மணி – 8.00 மணி என் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை பெண் ஊழியர்களுக்கு செவ்வாய், வியாழன், சனி: காலை 5.00 மணி – 8.00 மணி மற்றும் செவ்வாய், வியாழன், சனி: மாலை 4.00 மணி – 8.00 மணி மற்றும் ஞாயிறு: காலை 5.00 மணி – 8.00 மணி என் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இந்த நேர அட்டவணையை பின்பற்றி உடற்பயிற்சி மையத்தை பயன்படுத்துமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.