இன்று ராமகிருஷ்ண மிஷனில் சிறப்பாக நடைபெற்ற தீபாவளி காளி பூஜை

( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு ராமகிருஷ்ணபுரம் ராமகிருஷ்ண மிஷனில் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை தீபாவளி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜை சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையில் உதவி முகாமையாளர்களான ஸ்ரீமத் சுவாமி உமாதீஷானந்தா ஜீ, ஸ்ரீமத் சுவாமி ப்ரமண்யானந்தா ஜீ ஆகியோர் விசேட பூசைகளை நடாத்தினர்.

தீபாவளி அமாவாசையை முன்னிட்டு காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஆலயத்தில் விசேட காளி பூஜை நடைபெற்றதுடன், மாலை ஸ்ரீ ஸ்ரீ காளி தேவிக்கு சிறப்பு ஆரத்தியும் இடம்பெற்றது.

காளி தேவிக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆன்மிக உணர்வையும் மன அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் வழிபாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.
ராமகிருஷ்ண மிஷன் ராமகிருஷ்ணபுரம் மட்டக்களப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விசேட பூஜை நிகழ்வில் அனைவரும் அன்புடன் அழைக்கப்பட்டிருந்தனர்.