திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த கந்தசஷ்டி விரதோற்சவம்

( வி.ரி. சகாதேவராஜா)

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதோற்சவம் நாளை மறுநாள் 10.11.2026 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 16.11.2026 திங்கட்கிழமை வரை சிறப்பாக நடைபெறவுள்ளது என ஆலய தலைவர் சு.சுரேஸ் தெரிவித்தார்.

இந்த விரதோற்சவத்தில் சூரசம்ஹாரம் 15.11.2026 ஞாயிற்றுக்கிழமையும், திருக்கல்யாணம் 16.11.2026 திங்கட்கிழமையும் நடைபெறும்.

பூசை திருவிழாக்கள் அனைத்தும் ஆலய பிரதம குரு வேதாகம, கிரியா தத்துவ, வித்தக, பிரதிஷ்டா சிரோன்மணி, சிவாகம வித்தியா பூஷணம், சிவாச்சாரிய திலகம் விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள், மற்றும் ஆலய குரு சிவஸ்ரீ நீ. அங்குசநாதக் குருக்கள் தலைமையில் நடைபெறும்.

விரத காரருக்கு விளக்கம்.
14.11.2026ம் திகதி சனிக்கிழமை இரவு 09.14 மணிக்கு சஷ்டி திதி கூடுகிறது.
15.11.2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.35 மணிக்கு ஷஷ்டி திதிமுடிவடைகிறது.
16.11.2026ம் திகதி திங்கட்கிழமை விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.