புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 26 உத்தியோகத்தர்களுக்கான இப்பயிற்சித் திட்டம், மாவட்ட செயலகத்தினூடாகத் துறைசார் வளவாளர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய பயிற்சியின் வளவாளர்களாக கலந்துகொண்ட சமுதாயம்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் எம்.எம். ரசூல்ஷா, மாவட்ட செயலக போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் வி.ஜெகன் ஆகியோரால் அரச உத்தியோகத்தர்கள் நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவ்வாறு வினைத்திறனாகச் சேவையாற்ற முடியும் என்பது குறித்த தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.
குறிப்பாக, கணினி வன்பொருள் பிரச்சினைகளை அடையாளம் காணுதல், செயற்கை நுண்ணறிவை (AI) அலுவலகக் கடமைகளில் பயன்படுத்துதல், இணையப் பாதுகாப்பு (Cyber Security), மின்னஞ்சல் பயன்பாடு (E-mail usage) மற்றும் நிர்வாக ரீதியான கடமைகளுக்குத் தேவையான அடிப்படைத் தொழில்நுட்ப விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.





