( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் இன்று (4) புதன்கிழமை பதவியேற்றார்.
முன்னதாக அவர் மேளதாளம் சகிதம் வரவேற்கப்பட்டார்.
அவருடன் கல்முனை ஆதார வைத்தியசாலை பதில் பணிப்பாளர் மருத்துவர் பி.சிறிசங்கர் தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் கே.சத்தியமூர்த்தியும் கலந்து கொண்டமை சிறப்பானது.
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ துறை பேராசிரியர் மகப்பேற்று நிபுணர் மருத்துவர் எம்.திருக்குமார் உள்ளிட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கூடவே கடமைப் பொறுப்பேற்பும் இடம்பெற்றது.






