எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர் பிரிவில் பதவி நிலை உதவியாளராகப் பணியாற்றிய கே எம் றிழா நேற்று (30.09.2026) முதல் தமது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
1992 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி பத்தரமுள்ளை இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி உயர்கல்வி அமைச்சில் கூட்டுத்தாபன எழுதுனரான அரசாங்க சேவையில் இணைந்து கொண்ட கே எம் றிழா, அங்கு சுமார் 10 வருடங்கள் சேவை புரிந்துள்ளார்.
அதன்பின் 2012 ஜனவரி 30 ஆம் திகதி இடமாற்றம் பெற்று, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விடய எழுதனராக சேவையில் இணைந்து கொண்ட அவர், பணி ஓய்வு பெறும் போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்ட செயலாளர் பிரிவில் பதவி நிலை உதவியாளராக சுமார் 18 வருடங்கள் அதாவது 2018 ஆம் ஆண்டு பதவி உயர்வு கிடைக்கப் பெற்று நேற்று வரை றிழா பணி புரிந்தார்.
அதன்படி சுமார் 34 வருடங்கள் மொத்தமாக அரசாங்க சேவையில் நியாயமான கடமைப் பொறுப்புடன் சேவையாற்றியுள்ளார்.
இவர் மாவட்ட செயலகத்தில் சேவையாற்றுவதற்கு இணைந்து கொண்ட போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அப்போது மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களுடன் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் அவர்கள் உதவி மாவட்ட செயலாளர் பதவியில் செயற்பட்டுள்ளார்.
இதேவேளை, தற்போதைய அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் உட்பட முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்களான திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், என். ஏ. ஏ. புஷ்பகுமார (பதில்), எம். உதயகுமார், கே. கருணாகரன், திருமதி கலாமதி பத்மராஜா, திருமதி. ஜே. ஜே. முரளீதரன் ஆகியோர்களின் சேவைக் காலங்களிலும் மாவட்ட செயலகத்தில் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் இறுதியாக பணி ஓய்வு பெறும் போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தற்போதைய உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரனவன் அவர்களுடன் பதவி நிலை உதவியாளராக பணியாற்றிய உத்தியோகத்தர் றிழா அவர்கள் முன்னால் உதவி மாவட்ட செயலாளர்களான வி. வாசுதேவன், எஸ். ரங்கநாதன், எஸ் நவேஸ்வரன் ஆகியோரின் சேவைக் காலத்திலும் இதே பதவி நிலை உதவியளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆரம்பக் கல்வியை ஏறாவூர் அரபா வித்தியாலயத்திலும் இடைநிலை கல்வியை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையிலும் கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர் தரக் கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலும் கற்றார்.
சமூக சேவைகளில் மிகவும் ஆர்வம் இருந்த இவர் அரச சேவையில் தனது பணி ஓய்வை நேற்றுடன் நிறைவு செய்வதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் இவருக்கான பிரியாவிடை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, நினைவுச் சின்னங்கள் மற்றும் பாராட்டுகள் கையளிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.


