காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (30) பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, காத்தான்குடி பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநருக்கான பிரத்தியேக செயலாளர், நகர சபைத் தவிசாளர், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, 2026 ஆம் ஆண்டில் காத்தான்குடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், பல்வேறு திணைக்களங்களுடன் தொடர்புடைய விடயங்கள் மற்றும் பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துதல், நடைமுறையில் உள்ள திட்டங்களின் முன்னேற்றத்தை தொடர்ச்சியாக கண்காணித்தல் மற்றும் துறைசார் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டன.