கணபதிபுரத்தில் இரு பிள்ளைகளின் தாய் விபரீத முடிவால் உயிரிழப்பு!

வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை 04- கணபதிபுரம் கிராமத்தில் இரு பிள்ளைகளின் தாயொருவர் தற்கொலை செய்துள்ளார்.

அவர் 54 வயதுடைய வேலுப்பிள்ளை பிரபாவதி என்று இனங்காணப்பட்டுள்ளார்.

பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம். நசீலின் உத்தரவிற்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.