மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கற்சேனை விஷ்ணு வித்தியாலயத்தில் 17.09.2026 அன்று விவேகானந்தரின் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

இந்நிகழ்வில், இந்தியாவின் ராமகிருஷ்ண மிஷன், ராமநாதபுரத்திலிருந்து வருகை தந்த வணக்கத்திற்குரிய சுவாமி சுதபானந்தாஜி மகராஜ் மற்றும் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் ஆகியோர் இணைந்து விவேகானந்தரின் திருவுருவச்சிலையைத் திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சுவாமி சுதபானந்தாஜி மகராஜ் மற்றும் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் ஆகியோரால் மாணவர்களுக்கான பூரண ஆளுமை விருத்திச் செயலமர்வு இணைந்து நடத்தப்பட்டது.

மேலும், மாணவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியுடன் அவர்களின் ஆளுமை, தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பண்பு மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதற்கும், சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் இந்நிகழ்வு சிறப்பானதொரு வாய்ப்பாக அமைந்திருந்தது.