எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்கிலங்கையின் புகழ் பூத்த பாடசாலைகளான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும் மட்/ மெதஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான “பாடு மீன்களின் சமர் – 2026” இன்று காலை மிக விமர்சையாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்விற்கு விசேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உள்ளிட்ட வலயக்கல்விப் பணிப்பாளர்கள், இரண்டு பாடசாலைகளின் அதிபர்கள், கோட்டமுனை விளையாட்டு கிராமத்தின் பிரதிநிதிகள் என பலர் அதிதிகளாக கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
திராய்மடு கோட்டை முனை கிராமத்தின் விளையாட்டு மைதானத்தில் “பாடு மீன்களின் சமர் – 2026” வெகு விமர்சையாக இடம்பெற்றுவருகின்றது.


