இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் உப தலைவராக மட்டக்களப்பை சேர்ந்த சசிதரன் சங்கரப்பிள்ளை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் உப தலைவராக மட்டக்களப்பை சேர்ந்த சசிதரன் சங்கரப்பிள்ளை அவர்கள் தெரிவு செய்யப்பட்டதை கௌரவிக்கும் வகையிலும், அவரை வரவேற்கும் வகையிலும்,
கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபையில் 06.09.2026 திகதி விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.

இதன்போது, புதிதாக உப தலைவராக தெரிவு செய்யப்பட்ட சசிதரன் சங்கரப்பிள்ளை அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு வணக்கத்திற்குரிய அருட்பணியாளர் அருள்நாதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் அவர்கள் கலந்து கொண்டு, சசிதரன் சங்கரப்பிள்ளை அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது