சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டம் மூலம் மாணவர்கள் கௌரவிப்பு

ஹஸ்பர் ஏ.எச்-

சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் தரம் 05புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பணப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

தம்பலாகாமம் பிரதேச செயலகம் ஊடாக, தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வொன்றில், தம்பலகாமம் பிரதேசத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி மற்றும் குறித்த கௌரவம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு நேற்று (07.09.2026) மாலை தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் தம்பலாகாமம் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர்,சமூக பாதுகாப்பு சபையின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற இரு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு தலா ரூபா 25000.00 காசோலையும் பாடசாலை உபகரணங்களும் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனுடன் குறித்த காலப்பகுதியில் கடமையாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.

சமூக பாதுகாப்பு சபையின் தம்பலாகாமம் பிரதேச செயலகத்தின் இந்த முயற்சி, மாணவர்களின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிப்பதோடு, அவர்களுக்கு கல்வித் துறையில் தொடர்ந்து சிறந்து விளங்க உற்சாகமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.