Graubünden மாநிலத்தின் Lenzerheide பகுதியில் உள்ள Hotel Schweizerhof சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து சுமார் 10,000 விருந்தினர்களுக்கு ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
மோசடியாளர்கள் WhatsApp செய்திகள் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு, 250 சுவிஸ் பிராங்க் பணவரவு (Guthaben) கிடைத்துள்ளதாகக் கூறி, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைப் பெற முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சந்தேகத்திற்குரிய WhatsApp செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும், அவற்றில் உள்ள இணைப்புகளைத் திறக்க வேண்டாம் என்றும் ஹோட்டல் அறிவுறுத்தியுள்ளது. எந்தெந்த வாடிக்கையாளர் தகவல்கள் கசிந்துள்ளன என்பது இதுவரை தெளிவாகவில்லை.
தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. வெளிநாட்டிலிருந்து செயல்படும் சைபர் குற்றவாளிகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும், ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு IT சேவை நிறுவனத்தின் மீதான சைபர் தாக்குதலுடன் தொடர்பு இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
SUPEEDSAM குறுந்தலைப்பு:
ஹோட்டல் மீது சைபர் தாக்குதல்: 10,000 பேருக்கு எச்சரிக்கை – CHF 250 என WhatsApp மோசடி!


