நிந்தவூரில் ஸ்கை தமிழ் “Media Networking Gala” ஒன்றுகூடல்!

( வி.ரி.சகாதேவராஜா)

ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் “Media Networking Gala” எனும் கலந்துரையாடல் ஒன்றுகூடல் நிகழ்வு, ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஸ்தாபக பணிப்பாளர் ஜே.எம்.பாசித் தலைமையில் வியாழக்கிழமை (03) இரவு நிந்தவூர் Relax Garden இல் இடம்பெற்றது.

ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், ஊடகவியலாளர்களிடையே பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், அம்பாறை மாவட்டத்தின் இயங்கிவரும் ஊடகவியலாளர்கள் சம்மேளனங்களின் தலைவர்கள் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஊடகத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் வகையிலும், அனுபவங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளும் வகையிலும் இந்த “Media Networking Gala” நிகழ்வு அமைந்திருந்ததுடன் இரவு நேர விருந்துந்துடன் சிறப்பாக நிறைவு பெற்றது.