( வாஸ் கூஞ்ஞ) 23.08.2026
மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை வெற்றி அன்னை ஆலய பங்கில் அமல உற்பவ அன்னையின் பெயர் கொண்ட பேசாலை மரியாயின் சேனையின் வளர்ந்தோர் ஆண்கள் பிரிசீடியத்தின் 75வது ஆண்டு பவள விழா மற்றும் மடுமாதா கியூரியாவின் 25வது ஆண்டு வெள்ளி விழா வெகு சிறப்பாக ஆன்மீக வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது.
23.08.2026 அன்று ஞர்யிற்றுக்கிழமை பேசாலை பங்கு தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் அடிகளார் தலைமையில் புனித வெற்றி அன்னை ஆலயத்தில் இவ்விழா நடைபெற்றது.
இன்றைய நாளில் காலை 5.30 மணிக்கு மரியாயின்சேனை அன்னையின் கொடி பங்குத் தந்தையால் ஏற்றப்பட்டு இதைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தின் குடும்பநல இயக்குனரும் மரியாயின்சேனை மன்னார் மறைமாவட்ட ஆன்மீக இயக்குனருமான அருட்பணி அகஸ்ரின் புஸ்பராஜா அடிகளார் தலைமையில் தென் இந்தியா கோவை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணி அல்பேட் அடிகளார் மற்றும் பேசாலை பங்குத் தந்தை உதவி பங்கு தந்தை ஆகியோர் இணைந்து இத்திருவிழா கூட்டுத்திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.
இவ் வழிபாட்டு நிகழ்வில் மன்னார்- ஓலைத்தொடுவாய்- ஜோசப்வாஸ் நகர்- கரிசல்- சிறுத்தோப்பு மற்றும் காட்டாஸ்பத்திரி மரியாயின்சேனை பிரசீடியம் கியூரியாவின் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்டத்தின் குடும்பநல இயக்குனரும் மரியாயின்சேனை மன்னார் மறைமாவட்ட ஆன்மீக இயக்குனருமான அருட்பணி அகஸ்ரின் புஸ்பராஜா அடிகளார் அவர்களால் பவள மற்றும் வெள்ளி விழாவுக்கான நினைவுச் சின்னமும் பிரசீடியம்- கியூரியா தலைவர்களிடம் வழங்கப்பட்டது
இந் நிகழ்வின்போது மறைந்த பேசாலை பிரிசீடியத்தின் தலைவர்களும் நினைவு கூறப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


