எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சட்டவிரோதமான கனடா புலம்பெயர்வை தடுப்பதற்கான வழிமுறையினை கையாள்வது தொடர்பாக உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது நெறிப்படுத்தல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களது பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று 20.08.2026 திகதி குறித்த உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு
இடம்பெற்றது.
குறித்த தெளிவூட்டல் செயலமர்வினை கனடாவிற்கான பாதுகாப்பற்ற புலம்பெயர்வினை தடுக்கும் செயற்றிட்டங்களை முன்னெடுத்துவரும் அமைப்பின் உயர் மட்ட பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற செயலமர்வின் போது கனடாவிற்கான பாதுகாப்பான புலம்பெயர்வினை எப்படி மேற்கொள்வது, அதற்கான முன்னெடுப்புக்களை எந்த நிறுவனங்கள் எவ்வாறாக முன்னெடுக்கின்றனர். அதே வேளை பாதுகாப்பற்ற புலம்பெயர்வினால் ஏற்படும் தீமைகள் தொடர்பாகவும் இதன் போது தெளிவூட்டப்பட்டது.
குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


