வாகன விபத்தில் இருவர் பலி!

இரு வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

காலி, அம்பலன்வத்த பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் மிதிவண்டியொன்றும் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் மிதிவண்டி ஓட்டுநரும் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த மிதிவண்டி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் காலி, அம்பலன்வத்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபராவார்.

இதேவேளை, மாதம்பே, தம்பகல்ல பகுதியில் லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வீரகொடியான பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.