மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தில் 27 மில்லியன் ரூபாய் செலவில் புதிய ஆயுர்வேத வைத்தியசாலை விடுதி மக்கள் பாவனைக்கு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒந்தாச்சிமடம் கிராமிய ஆயுர்வேத மருத்துவமனையின் புதிய விடுதிக் கட்டிடம் திறப்பு விழா
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் ஒந்தாச்சிமடம் கிராமிய ஆயுர்வேத மருத்துவமனையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் உத்தியோகபூர்வமாக இன்று (12) புதன்கிழமை மக்களிடம் பாவனைக்காக கையளிக்கப்பட்டது .

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர் எம். ஏ. நபீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார்.

தற்போதைய அரசாங்கத்தினால் மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் பாரபட்சம் இன்றிய உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாகாண மற்றும் மாவட்ட சுதேச மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்