மடு பெருவிழாவை முன்னிட்டு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

வாஸ் கூஞ்ஞ) 12.08.2026

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆவணி மாத மருதமடு அன்னையின் பெருவிழாவுக்கு எதிர்பார்த்த பக்தர்கள் கூட்டத்தைவிட அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பில் வெளி மாவட்ட பொலிசாரையும் இணைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என மன்னார் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் மீளாய்வு கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

மடு விழாவையொட்டி செவ்வாய் கிழமை (11.08) பக்தர்களின் நலன் நோக்கி அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மீளாய்வு கூட்டம் மடுவில் நடைபெற்றது.

இதன்போது பாதுகாப்பு தொடர்பாக மன்னார் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவிக்கையில்

மடு விழாவை முன்னிட்டு கொடியேற்ற நாளிலிருந்து மடுப்பதியில் எமது பாதுகாப்பை நாங்கள் பலப்படுத்தியுள்ளோம்.

12ந் திகதியிலிருந்து வெளி மாவட்டங்களிலிருந்தும் பொலிசாரை இங்கு பாதுகாப்புக்காக அழைத்துள்ளோம். நாங்கள் பாதுகாப்பை மூன்று வளையங்களாக பிரித்து பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளோம்.

பாதுகாப்பை முன்னிட்டு முதல் பரிசோதனை செய்யும் ஒரு பகுதியாகவும் தேவாலய வெளிப் பகுதியில் இராணுவத்துடன் இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்.

மூன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் மூன்று பிரிவுகளிலும் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துப் பிரிவு- பாதுகாப்பு பிரிவு அடுத்து பக்தர்கள் ஆலயப் பகுதிக்குள் வந்து செல்லும் போது இதற்கான வீதி பாதுகாப்பையும் கவனிப்பதற்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்திற்குள் போக்குவரத்துக்களை இலகு படுத்துவதற்கு வாகனங்கள் வீதியோரம் இரு மருங்கிலும் நிறுத்தி வைப்பதற்கு தடை செய்துள்ளோம். வீதி கடமையில் பொலிசாரை நியமித்திருக்கின்றோம். வீதியோரங்களில் பொலிசார் பரிசோதனை செய்வது எமது கடமை. இருந்தும் முழுமையான முறையில் பரிசோதனை செய்யப்படா விட்டாலும் வீதி ஒழுங்கு செயல்பாட்டில் பொலிசார் கவனம் செலுத்துவர்.

உடனடித் தேவைக்கென பொலிஸ் குழுவும் ஆய்த்தப்படுத்தப்பட்டுள்னர். இன்றைய காலநிலையை கவனத்தில் எடுத்து தீயணைக்கும் கடற்படையினரையும் நாம் அழைத்துள்ளோம். இந்த நேரம் வரை அவர்கள் இன்னும் தயார் நிலைக்கு வரவில்லை.

பிரதேச சபைகளின் ஏற்பாட்டில் தண்ணீர் பவுசர்களையும் நாம் ஆய்த்தப்படுத்தியுள்ளோம். பத்து லட்சம் பக்தர்களையே நீங்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் எங்கள் கணிப்பின்படி இதற்கு மேலான பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் திருட்டுக்கள் இடம்பெறலாம் என்ற எண்ணதத்pல் சீசீரி வாகனம் ஒன்றையும் நாங்கள் ஏற்பாடு செய்து வைத்துள்ளோம். அதிகமான பொலிசார் சிவில் உடையிலும் கடமைபுரிவர்.

தற்பொழுது 200 பொலிசார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். 13ந் திகதி தொடக்கம் முழுமையான பாதுகாப்பில் பொலிசார் ஈடுபடுவர். இருந்தும் ஏனைய உதத்pயோகத்தர்களும் எங்களின் பாதுகாப்பு கடமைகளில் எங்களுடன் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டு நிற்கின்றோம்.

எங்களின் பாதுகாப்பில் குறைபாடுகள் காணப்பட்டால் நீங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தும் பட்சத்தில் நாங்கள் திருத்தி அமைத்து செயல்படவும் தயாராக இருக்கின்றோம். கடற்படையினரின் உதவியுடன் டோனர் கமரா மூலம் கவனம் செலுத்தவும் ஆய்த்தம் செய்யப்பட்டுள்ளது என மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மடு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.