முன்னோர்கள் ஆசிர்வதிக்கும் ஆடி அமாவாசை விரதம் சந்ததிக்கு வளம் சேர்க்கும் – சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா
எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி புதன்கிழமை ஆடி அமாவாசை விரதம் ஆகும். இந்த ஆடி அமாவாசை மிகவும் சிறப்பானது அதாவது சூரியன் வடதிசையில் இருந்து தென் திசை நோக்கி அதாவது தட்சாயணம் நோக்கி சூரியனின் நகர்வு ஆரம்பமாவது ஆடியில் ஆகும். இதனால் இதில் வரும் ஆடி அமாவாசை சிறப்பானதாகும்.
இந்த ஆடி அமாவாசையில் பிதிர்களுக்காக விரதம் இருந்து அவர்கள் ஆசி பெறுவது மிகவும் சிறப்பாகும். வள்ளுவப் பெருந்தகை தென்புலத்தார் வழிபாடு பற்றி கூறியிருக்கிறார். வரும் இந்த ஆடி அமாவாசையில் முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து தர்ப்பணம் செய்து உதவியற்றவர்களுக்கு தானம் செய்து முன்னோர்களை நினைத்து படைத்து சிவனுக்கு மோட்ச தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு அந்தக் கருமங்களை செய்வதன் மூலம் அவர்களின் ஆசி பெறுவதால் சந்ததி வளமாகும் என பிதிர் வழிபாடு தெளிவுபடுத்தி இருக்கிறது இந்த வகையில் ஆடி அமாவாசை அன்று பிதிர் லோகத்தில் இருந்து பிதிர்கள் பூலோகத்திற்கு வருவதாகவும் அவர்களை நினைத்து நாம் செய்யும் கருமங்களில் மகிழ்ந்து குடும்பத்தை ஆசீர்வதித்து சந்ததிகள் வளம் பெற ஆசீர்வாதம் வழங்குவார்கள் என்பது ஐதீகம் ஆடி அமாவாசை தினம் அன்று நதியோரங்கள் கடலோரங்களில் தர்ப்பணம் செய்வதும் அந்தணர்களுக்கு தானம் கொடுப்பதும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது மிகவும் சிறப்பானது ஆகும்.
Kajaana chandrabose
journalist (Dip.journalism )


