திராய்க்கேணிப் படுகொலை 36 ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல்!

( வி.ரி.சகாதேவராஜா)

திராய்க்கேணிப் படுகொலையின் 36 ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நேற்று (6) மாலை அங்கு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள திராய்க்கேணி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் 1990.08.06 அன்று நடந்த மிலேச்சத்தனமான படுகொலைகளின் 36 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வே நடைபெற்றது.

1990 ம் ஆண்டு ஆவணி மாதம் 06 ம் திகதியன்று அந்தக் கிராமத்தையண்டி வாழ்ந்த சில முஸ்லீம் காடையர் குழுக்களால் அரச படைகளின் துணையுடன் நடந்தேறிய மிலேச்சத்தனமான படுகொலையில் 54 பேர் துடி துடிக்க வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
அந்த நாளை அக்கிராமத்து மக்கள் வருடா வருடம் நினைவேந்திவரும் நிலையில் இம்முறையும் இவ் நினைவேந்தல் இடம்பெற்றது.

படுகொலை இடம்பெற்ற ஆலய முன்றலில் இடம்பெற்ற இந் நினைவேந்தலை கிராமத்து மக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டு தீபம் ஏற்றி பூஜைகள் செய்து நினைவேந்தினர்.

இந்நினைவேந்தலில் சமூக செயற்பாட்டாளர்கள் காந்தன் மற்றும் பிரதீவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நினைவேந்தியிருந்தனர்.