எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு பிரதேசத்தில் இன்று (05) திகதி காலை 8.30 முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 73.7 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தின் வளிமண்டலத்தில் உருவாகி இருக்கின்ற காற்று சுழற்சி நிலை காரணமாக மட்டக்களப்பில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது.
இதேவேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான உறுகாமத்தில் 47.0 மில்லி மீற்றர், உன்னிச்சையில் 48.6 மில்லி மீற்றர், தும்பங்கேணியில் 22.0 மில்லி மீற்றர், மயிலம்பாவெளியில் 46.1 மழைவிழிச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.உஷானி ஊடகப்பிரிவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்வரும் தினங்களில் மழைவிழ்ச்சி குறைவடைத்து செல்வதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக இதன் போது தெரிவித்தார்.


