(வி.ரி. சகாதேவராஜா)
நாவிதன்வெளி பிரதேச சபையின் உதவித்தவிசாளர் கு.புவனரூபன் தனது இம்மாத கொடுப்பனவை மூன்று பாடசாலைகளில் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற விருக்கும் மாணவர்களுக்கான இலவச பரீட்சை முன்னோடிக் கருத்தரங்கை நேற்று (4) நடத்தியுள்ளார்.
நாவிதன்வெளி விவேகானந்தா மகா வித்தியாலயம், நாமகள் வித்தியாலயம் மற்றும் கலைமகள் வித்யாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளுக்குமான மாணவர்களுக்கான பயிற்சி முன்னோடி கருத்தரங்கு நடத்தப்பட்டது.
விவேகானந்தா மகா
வித்தியாலயயத்தில் நடைபெற்ற இச் செயலமர்வை பட்டிருப்பு தேசிய பாடசாலை பிரபல ஆசிரியர் எஸ்.ஜெயானந்தன் நடத்தினார் .
நாவிதன்வெளி பிரதேச உதவி தவிசாளர் கு.புவனரூபன், தான் வென்றதும் உறுதியளித்ததன்படி முதலாம் மாதமிருந்து உறுதியளித்தபடி ஒவ்வொரு மாதமும் தனது மாதாந்த வேதனத்தை நலிவுற்ற பொதுமக்களுக்காக மற்றும் மாணவர்களுக்காக செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


