( வி.ரி. சகாதேவராஜா)
அரச மருந்து கலவையாளர்களின் சங்க வருடாந்த பொதுக் கூட்டத்தில் இவ் வருடம் ஓய்வுபெற்ற சேவையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் சங்கத் தலைவர் உதேனி திஸாநாயக்க தலைமையில் நேற்று குருநாகலில் இடம்பெற்றது.
அச் சமயம், கல்முனை ஆதார வைத்தியசாலையில்40 வருட சேவையை பூர்த்தி செய்து, அண்மையில் ஓய்வு பெற்ற சிரேஸ்ட மருந்துக் கலவையாளர் பரமலிங்கம் சந்திரமோகன் நினைவுச்சின்னம் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சிறந்த சேவைக்காகவும், தாய்சங்கத்தினுடனான உன்னத ஒத்துழைப்பிற்காகவும் அவர்
பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
காரைதீவைச் சேர்ந்த சிரேஸ்ட மருந்துக் கலவையாளர் பரமலிங்கம் சந்திரமோகன் சிறந்த சமூக செயற்பாட்டாளர் ஆவார்.


