(சுகுணதாஸ் சசிகுமார்)
திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக விவசாயிகளிடம் நெல்கலினை கொள்வனவு செய்து வந்தவர்கள் நெல்லின் அளவினை பிழையாக காட்டுகின்ற தராசினை பயன்படுத்தி விவசாயிகளினை ஏமாற்றி குறைவான பணத்தினை கொடுத்து அதிகூடிய நெல் மூட்டைகளினை ஏமாற்றி எடுத்துச் சென்றுள்ளனர் எனவே இன்றைய தினம் விநாயகபுரத்தில் இவர்கள் நெல்லினை கொள்வணம் செய்கின்ற பொழுது திருக்கோவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் திடீர் விஜயத்தினை மேற்கொண்டு அவற்றினை ஆராய்கின்ற பொழுது விவசாயிகள் தங்களுக்கு நடந்த அநீதி தொடர்பான விவரங்களினை தவிசாளர் இடம் முறையிட்டதனை தொடர்ந்து கொள்வனவு செய்ய வந்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
அதனைத் தொடர்ந்து இவர்களிடம் இதுவரையிலும் நெல்களினை விற்பனை செய்தவர்கள் தங்களுடைய முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்திற்கு முன்வைத்து உங்களுடைய நஷ்ட ஈடுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தவிசாளர் வலியுறுத்தினார்


