நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இடைக்கிடையே மழைப்பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.


