தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம்!

நேர்மையான கலாச்சாரம் – கிளீன் ஶ்ரீலங்கா” தேசிய நேர்மை வாரம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

“நேர்மையான கலாச்சாரம் – கிளீன் ஶ்ரீலங்கா” என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நேர்மை வாரம் இன்று (ஜூலை 27) முதல் ஜூலை 31 வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம்இ ஜனாதிபதி அலுவலகம் மற்றும் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன.

“தேசிய நேர்மை வாரம்” இன்று காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும் ‘தேசிய நேர்மை பிரமாணம்’ வழங்குதல் மற்றும் ‘நன்னடத்தை விதிகள்’ என்பவற்றை வெளியிடுவதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இன்றைய தினம்(27) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் “நேர்மையான கலாச்சாரம் – கிளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் ஆரம்பமானது.

இவ்வாரத்தை பிரகடனப்படுத்துவதன் முக்கிய நோக்கம்இ நாட்டின் அரச சேவையின் தரம்இ வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன்இ ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதாகும்.

இங்கு ‘நேர்மை ‘ (ஐவெநபசவைல) என்பது சுய ஒழுக்கம்இ சுய கட்டுப்பாடு மற்றும் சுய கண்காணிப்புடன்இ மனசாட்சிக்கு உடன்பட்டுஇ சரியானஇ வெளிப்படைத்தன்மை மற்றும் தார்மீக ரீதியில் தனது சேவையை வழங்குவதைக் குறிக்கிறது.

அதற்கமையஇ இந்த தேசிய நேர்மை வாரம் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது:

* ஜூலை 27: நிறுவன ரீதியான நேர்மையினை மேம்படுத்தல்.
* ஜூலை 28: நிதிஇ டிஜிட்டல்இ தொழில்முயற்சி மற்றும் தொழில்நுட்ப ரீதியான நேர்மையினை மேம்படுத்தல்.
* ஜூலை 29: ஆன்மீகஇ தார்மீகஇ கலாச்சார மற்றும் சமூக ரீதியான நேர்மையினை மேம்படுத்தல்.
* ஜூலை 30: செயற்பாட்டுஇ உட்கட்டமைப்புஇ சேவை வழங்கல் மற்றும் உழைப்புசார் நேர்மையை மேம்படுத்தல்.
* ஜூலை 31: சுற்றுச்சூழல்இ வள முகாமைத்துவம்இ கிராமிய மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மை மேம்படுத்தல்.

ஜனாதிபதி அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ் ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள “உள்ளக அலுவல்கள் பிரிவு” ஊடாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் அல்லது ஊழல் செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

பொதுமக்கள் ஞசு குறியீடுகள்இ மின்னஞ்சல் (நுஅயடை)இ கடிதங்கள்இ தொலைபேசி அழைப்புகள் அல்லது வலைத்தளச் செய்திகள் ஊடாக தமது முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம். அத்துடன்இ அந்த முறைப்பாடுகள் தொடர்பாக நிறுவனத் தலைவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் விசேட டிஜிட்டல் கட்டமைப்பும் செயற்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 31 ஆம் திகதிக்குப் பின்னர்இ டிசம்பர் 31 ஆம் திகதி வரை இத்திட்டம் அனைத்து அரச மற்றும் அரை அரச நிறுவனங்களிலும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.