களுவாஞ்சிக்குடி புதிய தபால் அலுவலகம் நாளை திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தபால் அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு 2026 ஜூலை 25 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் தலைமை தாங்கி புதிய தபால் அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார்.

பொதுமக்களுக்கு விரைவான தபால் சேவைகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய தபால் அலுவலகம், களுவாஞ்சிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கான சேவை வழங்கப்படவுள்ளது.

அரச அதிகாரிகள், தபால் திணைக்கள அதிகாரிகள், பிரதேச பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.