அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து ஜவர் வைத்தியசாலையில்

( வாஸ் கூஞ்ஞ) 22.07.2026

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் ஒன்று அதிகாலையில் விபத்துக்கு உள்ளாகியதில் ஐந்து பேர் காயங்களுக்கு உள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தானது மன்னார் பறயநாளன்குளம் பகுதியிலுள்ள பாலத்தடியிலேயே புதன் கிழமை (22.07) அதிகாலை 3.25 மணியளவில் போக்கில் மோதுண்டமையாலேயே இவ் விபத்து நடைபெற்றதாக ஆரம்ப விசாரனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பயணித்த ஐந்து கன்னியாஸ்திரிகள் காயங்களுக்கு உள்ளாகி மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக மூன்றாம் வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இதில் ஒரு அருட்சகோதரியை மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பாக பொலிசார் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.