இசைக்கு உயிர் கொடுப்பவர்கள் இலங்கை ரசிகர்களே!

“இசையின்றி அமையாது இலங்கை” என்ற கருப்பொருளில், 15 மாறுபட்ட குரல்களில் பாடி ரசிகர்களை மகிழ்வித்து வரும் மிமிக்ரி மற்றும் பின்னணிப் பாடகர் ஜெய் கிரிஷ் கடந்த வாரம் கல்முனை மாநகருக்கு வருகை தந்த போது கல்முனை நெற் இணையத்தள கலையகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இந்திய பாடகர் ஜெய் கிரீஸ் உடனான நேர்காணல்!

கேள்வி: உங்களைப் பற்றி அறிமுகப்படுத்த முடியுமா?
பதில்: நான் ஜெய் கிரிஷ். நாகப்பட்டினம் காரைக்காலைச் சேர்ந்தவன். தற்போது சென்னையில் வசித்து வருகிறேன்.பின்னணிப் பாடகர் மற்றும் மிமிக்ரி கலைஞராக இசைத்துறையில் பயணித்து வருகிறேன்.

கேள்வி: இசையின் மீது ஆர்வம் எப்போது ஏற்பட்டது?
பதில்: சிறுவயதிலிருந்தே. பாடசாலையில் தொடங்கியது.வானொலி, திரைப்படப் பாடல்கள் கேட்டு பாடிப் பயிற்சி செய்ததே தொடக்கம்.

கேள்வி: குடும்பத்தின் ஆதரவு எவ்வளவு முக்கியம்?
பதில்: அது மிக முக்கியம். அவர்கள்தான் எனது அப்பா நாடகக் கலைஞர். அவரை அடியொற்றி பாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவர் ஒரு மிகப்பெரிய பலம்.

கேள்வி: “1 Singer – 15 Voices” என்ற தனித்துவம் 15 குரல்களில் பாடும் திறமை எப்படி உருவானது?
பதில்: தொடர்ந்து கவனித்து கேட்பதும், தினசரி பயிற்சியும், குரலின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதும்தான் காரணம்.

கேள்வி: ரசிகர்கள் அதிகம் விரும்பும் குரல் எது?
பதில்: ரிஎம்எஸ் ,எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலை அதிகம் விரும்புகிறார்கள். ஜேசுதாஸ், தேவா, ஹரிஹரன், விஜய், ஸ்ரீநிவாஸ் போன்றோரையும் விரும்புகின்றனர்.

கேள்வி: இலங்கைக்கு வருவதற்கான காரணம்?
பதில்: இலங்கை ரசிகர்களின் அன்பும், நிகழ்ச்சி அமைப்பாளர்களின் அழைப்பும்.

கேள்வி: இலங்கை ரசிகர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: அவர்கள் மிகவும் அன்பானவர்கள்; இசையை மனதார ரசிக்கிறார்கள். இசைக்கு உயிர் கொடுப்பவர்கள் இலங்கை ரசிகர்களே.

கேள்வி: இன்றைய இசைத்துறையில் என்ன மாற்றம் காண்கிறீர்கள்?
பதில்: தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய திறமைகள் விரைவாக வெளிவருகின்றன.

கேள்வி: இளைஞர்களுக்கு உங்கள் ஆலோசனை?
பதில்: தினமும் பயிற்சி, பொறுமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு அவசியம்.
தனிப்பட்ட விருப்பங்கள்.

கேள்வி: உங்களுக்கு மிகவும் பிடித்த பாடகர் யார்?
பதில்: எஸ். பி. பாலசுப்பிரமணியம். அவருடைய குரலின் இனிமையும் உணர்வும் என்னை கவர்கின்றன.
அவர் உலகத்தின் பாடகர். அவரது இழப்பு பேரிழப்பு.

ஆனால் எனது மானசீக குரு பாடகர் டி எம் எஸ்.

கேள்வி: இலங்கை ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: உங்கள் அன்பும் ஆதரவும் எனது பலம். தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிறைவுக் கேள்வி
கேள்வி: “இசை என்பது உங்களுக்கு என்ன?”
பதில்: “இசை என்பது என் உயிர், என் மூச்சு, என் வாழ்க்கையின் மொழி.”
( பல பாடல்களை அந்த 15 குரல்களில் அழகாக பாடிக் காட்டினார்)

நன்றி ஜெய் கிரிஷ் அவர்களே! உங்கள் இசைப் பயணம் மேலும் பல வெற்றிகளைப் பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள்.

நேர் கண்டவர்:
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
சிரேஸ்ட ஊடகவியலாளர்
காரைதீவு