திருக்கோவில் ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய ஆடி உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நேற்று (14) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ் ஆலய ஆடி அமாவாசை உற்சவம் எதிர்வரும் 2026.07.26 வியாழக்கிழமை கொடிஏற்றத்துடன் ஆரம்பித்து 2026.08.12ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய உள்ளது.

இக்காலபகுதியில் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நலன்புரி சேவைகள் தொடர்பாக திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இவ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையிலான ஆலய பரிபாலன சபையினர் கலந்து கொண்டனர்.

திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சு.சசிகுமார், உதவி பிரதேச செயலாளர் ரெட்ணம் சுவாகர், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உத்தியோகத்தர்கள், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர், திருக்கோவில் பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்