சுவிட்சர்லாந்தின் முன்னணி வர்த்தக நிறுவனமான Migros, தனது «IP-Suisse Riesen Cervelas» சாசேஜ் தயாரிப்பை உடனடியாக சந்தையில் இருந்து மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது.
தயாரிப்பு பொதிகளில் தவறுதலாக சீஸ் கலந்த கிரில் சாசேஜ்கள் நிரப்பப்பட்டிருந்த போதிலும், அதில் உள்ள பால் அலர்ஜி மூலப்பொருள் குறித்து பொதியில் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பால் அலர்ஜி அல்லது லாக்டோஸ் ஒவ்வாமை கொண்டவர்கள் இந்த தயாரிப்பை பயன்படுத்த வேண்டாம் என Migros எச்சரித்துள்ளது. எனினும், மற்ற வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்தவித உடல்நல பாதிப்பும் இல்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
29 ஜூலை 2026 பயன்பாட்டு இறுதி தேதியைக் கொண்ட «IP-Suisse Riesen Cervelas» தயாரிப்புகளே இந்த மீளப்பெறும் நடவடிக்கையில் அடங்குகின்றன. இவை சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள Migros கிளைகளிலும், Migros ஆன்லைன் சேவையிலும் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட அனைத்து தயாரிப்புகளும் ஏற்கனவே விற்பனையிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக Migros தெரிவித்துள்ளது. வாங்கிய வாடிக்கையாளர்கள் பொருளை அருகிலுள்ள Migros கிளைக்கு திருப்பி ஒப்படைத்தால், முழு பணமும் மீள வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


