நாட்டில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 67,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஜூலை மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் 10,685 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், நேற்று (10) ஒரே நாளில் சுமார் 1,110 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
தற்போது பல முக்கிய மருத்துவமனைகள் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளன. இதன் காரணமாக சுகாதாரக் கட்டமைப்பின் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதுடன், மருத்துவமனைகளில் நோயாளிகளின் நெரிசல் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.


