பலாலி ராஜேஸ்வரி அம்மன் ஆலய பாதையை பொதுமக்கள் பாவனைக்காக திறக்கும் வண்ணம் பல இந்து அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. நீண்ட காலமாக பக்தர்கள் அதன் வழிபாட்டிற்காக கோயிலுக்கு உரித்தான பாதையை பயன்படுத்த ராணுவம் அனுமதிக்கவில்லை . பொதுமக்கள் தனியார் காணியினூடாக வழி அமைத்து அதன் வழிபாடுகளை செய்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரி அம்மன் ஆலய போக்குவரத்து வழி பாதை விடுவிற்ப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் எடுத்த முயற்சியின் காரணமாக யாழ்ப்பாண கட்டளை தளபதியுடன் பேச்சுவார்த்தையின் பலனாக பாதையை பொது மக்கள் பயன்பாட்டிற்காக பகுதி அளவில் விடுவிப்பதற்கு கட்டளை தளபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த பாதை திறப்பிற்கு முழு முயற்சியாக நின்ற பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அவர்களுக்கு சர்வதேச இந்து மத பீடம் சார்பாக கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா பாராட்டுகளை தெரிவித்துள்ளது.


